ஈழத் தமிழர் பிரச்;னையில் காங்கிரஸ் கட்சியின் நிலைபாடுகளால் கடும் அதிருப்தியடைந்துள்ள அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரரான தமிழருவி மணியன் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
மிகுந்த நேர்மைக்குப் பேர் போனவர் தமிழருவி மணியன். மூப்பனாருடனும் அவரது மகன் வாசனுடன் மிக நெருக்கமாக இருந்தபோதும் பதவி கேட்டு அலைந்ததில்லை. இவரை மக்களவை, சட்டமன்றத் தேர்தலில் நிறுத்த மூப்பனார், வாசன் முயன்றும் முடியவி்ல்லை.
கட்சி, பதவி, பணம் என்று அலையாத மணியன் சிறந்த தமிழ்ப் பற்றாளர். மிகச் சிறந்த எழுத்தாளர். இத்தனை காலம் கட்சியில் இருந்தாலும் வறுமையில் உழல்பவர். சமீபத்தில் தனது தாயாருக்கு அரசு பொது மருத்துவமனையில் தான் வைத்தியம் பார்த்தார். கேட்டால், எனக்கு அவ்வளவு தான் வசதி என்றார்.
இவரை வலுக்கட்டாயமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக்கினார் வாசன். ஆனால், இலங்கை விவகாரத்தில் தனது கட்சியின் செயல்களால் வெறுத்துப் போயிருந்தார்.
இந் நிலையில் ஈழத்தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பற்ற செயல்பாட்டை கண்டித்தும், இவ்விவகாரத்தில் கட்சித் தலைவர் சோனியாகாந்தி மெளனம் சாதித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்தும் தனது அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் மணியன்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இலங்கையில் ராஜபக்சேவின் இனப் படுகொலை ராணுவம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. ஆனால் இப்பிரச்னையில் ஆளும் கட்சியின் தலைவர் என்ற வகையில் சோனியா மெளனத்தை கலைக்கவில்லை. அவருடைய தலைமையிலான கட்சிக்கு தமிழையும், தமிழ் சமுதாயத்தையும் அடகு வைக்க எனது இதயம் இடம் கொடுக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியில் 40 ஆண்டுகள் இருந்துள்ளேன். காங்கிரஸ் கட்சிக்கு மக்களுக்காக பாடுபடும் போர்க்குணம் இல்லை. இதனால் காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் உட்பட நான் வகித்த அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள 40 எம்.பி.க்களும் இணைந்து செயல்பட்டால், இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்க முடியும் என்றார் தமிழருவி மணியன்.
No comments:
Post a Comment