Total Pageviews

Sunday, 16 October 2011

அந்தநாள்




பனித்துகள்கள் பொழியும்
மாலை வேளையில்
நீளும் காலத்தின் இருண்மைக்குள்
நீண்ட நெடிய காத்திருப்புடன் ..
உயிர்கள் குலவிடும்
ஓசையின் பாக்கள்
காதுக்குள் கனவாய்.....
கரங்களை உரசியே
தீ மூட்ட முனைந்து
தோற்றுப் போயினும்
காத்திருப்பின் அவசியம்
எதையுமே சட்டை பண்ணாமல்....
ஒவ்வொரு முறை
படிக்கும் போதும்
புதிதாய்
அழகாய்
அறிவியலாய்
சட்டைப் பைக்குள் இருக்கும்
அந்தக் கவிதை
அவளுக்கானது.....
கனவுகளை கவ்விப் பிடித்து
கர்வம் கலந்த விறைப்பாய்
ஓடிய என் குருதிக்குள்
சிறகடித்தது
அந்தப் பட்டாம் பூச்சி ....
வார்த்தைகள் அற்ற
சூனியத்துள்
தூக்கி வீசப்பட்ட நானும்
என் கவிதையும் மட்டுமே
அவளுக்காய்
நீண்ட நெடிய காத்திருப்புடன்.......
                                         மகிழ்
                                          

No comments:

Post a Comment