Total Pageviews

Friday, 14 October 2011

விளக்கணைத்த விட்டில்களாய்....!!



உதிரத்தால் உருவாகிய
உறவுகள் உருக்குலைய
உணர்வுகளால் தோன்றிய
புரிதல்கள் சொந்தங்களாய்
உலகியல் மாற்றத்தில்
மறக்கடிக்கப்பட்டன தியாகங்கள்
வாழ்வியல் தொடரின் பக்கங்கள் பல
மாறா வடுக்களாய்
ஓ மனிதமே நீ தொலைத்தது
பொருள் அல்லவே தேடிக்கொள்ள
இதயங்கள் இங்கு சுயநலச்
சுழலுக்குள் சுருங்குவதால்
விளக்கணைத்த விட்டில்களாய்
பிண்டங்களாய் வாழ்க்கை .....!



                                          அனிஸ்கா

No comments:

Post a Comment