Total Pageviews

Friday, 14 October 2011

விமலின் நல்ல உள்ளம்!

Vimal retuns his salary for Vaagai Sooda Vaa flop


தமிழ் சினிமாவில் வளரும் கதாநாயகனாக இருப்பவர் விமல். 'பசங்க', 'களவாணி' ஆகிய வெற்றிப் படங்களில் நடித்த விமல், 'வாகை சூட வா' படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வெளிவந்து ஓடிக் கொண்டிருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் ஓடவில்லையாம். இப்படத்தில் காட்டப்படும் கிராமமான 'கண்டெடுத்தான் காடு' கிராம செட்டிற்கே 2 கோடி ரூபாய் செலவு செய்திருந்தார்கள். இப்படத்தில் நடிப்பதற்கு 50 லட்ச ரூபாய் சம்பளமாக வாங்கியிருந்தார் விமல். 'வாகை சூட வா' படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால் தனது சம்பளத் தொகையான ரூ.50 லட்சத்தையும் மொத்தமாக திருப்பிக் கொடுத்திருக்கிறார் விமல் 'வாகை சூட வா' படத் தயாரிப்பாளர் முருகானந்தம் இப்படத்தின் தோல்விக்கு பின்பு பணச்சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட கேள்விப்பட்ட விமல், அவருக்கு உதவும் விதத்தில், தான் வாங்கிய ஐம்பது லட்ச ரூபாய் சம்பளத்தையும் மொத்தமாக திருப்பிக் கொடுத்திருக்கிறாராம். தன்னிடம் பணமில்லாத நிலையிலும், இரண்டு புதிய படங்களை ஒப்புக் கொண்டு அதில் கிடைத்த அட்வான்சுடன், மீதி தொகையை புரட்டிக் கொடுத்திருகிறார் விமல். அதுமட்டுமின்றி ஒரு படத்தில் இலவசமாகவே நடிச்சு தர்றேன். கவலைப்படாதீங்க என்றும் சொல்லி விட்டு வந்திருக்கிறாராம். 

No comments:

Post a Comment