திருடு.
கொலை செய்.
கொள்ளையடி.
ஊழல் செய்.
நில அபகரிப்பு செய்.
கட்டப் பஞ்சாயத்து செய்.
பன்னாட்டு முதலைகளுக்கு
நாட்டை விற்றுவிடு.
நியாயத்தின் வழி நின்ற
இனமழிக்க ஆயுதம் கொடு.
உனது குடிமகனை அண்டைதேசம்
கொலை செய்ய அனுமதி கொடு.
ஒருநாள் நீ தியாகியாவாய்.
நீ போகுமுன் மறக்காமல்
உன் குடும்பத்தாரிடம்
சொல்லிவிட்டு போ!
ஓட்டுப் பொறுக்க வருகையில்,
பணம் கொடுக்கச் சொல்.
பொருள் கொடுக்கச் சொல்.
இலவசம் அறிவிக்கச் சொல்.
காட்டிக் கொடுக்கச் சொல்.
கூட்டிக் கொடுக்கச் சொல்.
உறவாடிக் கெடுக்கச் சொல்.
எம் தலித்துகளின்
வீட்டில் தங்க சொல்.
அவர்களின் பழங்கஞ்சியை
தட்டி பறித்து குடிக்க சொல்.
அவர் தம் குழந்தைகளின்
மூக்கை சிந்திவிடச் சொல்.
சித்தாளின் சிமெந்துகலவையை
தட்டிப்பறித்து தவறாமல்
புகைப்படம் எடுத்து
பத்திரிக்கைகளில் உலாவரச் செய்.
இந்த மூடர் கூட்டம்
உன் குடும்பத்தை
ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து
அழகு பார்க்கும்.
இது நிதர்சனம்.
அகரத்தான்
No comments:
Post a Comment