Total Pageviews

Wednesday, 5 October 2011

விடியலை தேடி



ஆக்கம் பெற்ற ஈழம்
காணமல் போகிறது
சிறந்த மொழியாம் தமிழ் மொழி
சிதைந்து போகிறது அங்கே...
விழிகள் சிந்துகிறது நாளும்
பனித்துளிகள்...
சமரில் தமிழன் தலை
சதியால் சரிந்து போக
சாதித்ததாய் எண்ணுகிறது(....)
சாதனை என்னவென்று
அறியாது போனது பலருக்கு...
மனிதம் அழியும் போது
மனிதாபிமானம் இல்லா மனங்கள்
மரத்துப் போனது தான் ஏனோ? ....
நீதி தேவதையின் கண்களை கட்டி விட்டு
நீதிதனை எதிர்பார்ப்பது தான் முறையோ?...
உண்மைகள் என்றும் உறங்காது - இருந்தும்
உலகம் இனியும் கண் விழிக்குமா?
தமிழன் வீழ்வான் எழுவான் வெல்வான்
வீழ்ந்தே இருக்கமாட்டான்  ....
மண்ணில் இரத்தம் காயவில்லை இன்னும்
மௌனிக்கிறது மனிதங்கள்
முடிவுகள் இல்லாது
நகர்கிறது நாட்கள்
விடியலை தேடி....
                                              பா ர தி 

No comments:

Post a Comment