Total Pageviews

Saturday, 15 October 2011

தராசு ஒன்று இங்கு சிதைபட்டுக் கிடக்கிறது




செல்கின்ற இடம்
எதுவென்று தெரியவில்லை
செல்ல வேண்டிய இடமும்
எதுவென்று புரியவில்லை
வழிநடத்திச் செல்ல இங்கு
யாருமே இல்லை
வழிகாட்டி வந்தோரும்
வழிவிட்டுப் போயினர்
காக்கவென வந்தோர்
கழுத்தறுத்துப் போயினர்
உடன் வருபவர்களில்
வழிப்பறித் திருடர் யார்?
கால் வாரி விடுபவர் யார்?
பயங்கரமான வழி இது
புதிரான பயணம் இது
தராசு ஒன்று இங்கு
சிதைபட்டுக் கிடக்கிறது.
தெரு விளக்காய் நின்று
திரு விளக்காய் போனவர்க்கு
ஒரு விளக்கேற்ற
ஏன் இத்தனை குளறுபடி?
                                --வேல்தர்மா
                                      

No comments:

Post a Comment