Total Pageviews

Sunday, 2 October 2011

மனதின் தேடல்



என்ன கொடுமையென்று யாரிடம்சொல்ல
எழுதாத தீர்ப்புகளாய் வாழ்வின் நிலை
துடுப்புகள் இழந்து தத்தளிக்கும்
படகுகளாய் மனங்களின் தவிப்புகள்
சுதந்திரமிருந்தும் தடுக்கிறது மனம்
காதல்கள் இருந்தும் வெறுக்கிறது மனம்
ஆசைகள் இருந்தும் அடக்கிறது மனம்
அத்தனையும் இருந்தும் ஏங்கிறது மனம்
உண்ண அமர்ந்த போது மறுத்த உதடுகளோடும்
உறங்க நினைத்தபோது மறுத்த கண்களோடும்
நிதமும் உறவுகளை எண்ணி எண்ணி
நிலை குலைகிறது மனம்....
புலரும் பொழுதுகளை மறந்து
மறையும் பொழுதுகளோடு என்றும்
நிம்மதியற்ற ஆயிரம் நிமிடங்களைவிட
நிம்மதியான ஒரு நிமிடத்தை தேடுகிறது மனம்...

                                                   --ஹாசிம்
                                                      -

No comments:

Post a Comment