யானை ' கூட வெட்டப்படலாம்
எதிர் தரப்பு
'ராணி' யால்
எந்த நேரமும்
ஆபத்து நிகழலாம் !
விழிப்போடு
இல்லையெனில்
கதை முடியலாம்
இப்படித்தான்
போவேன் என
அடம் பிடித்து
ஒரே வழியில் சென்றால்
'யானை ' கூட
வெட்டப்படலாம் !
படிப்படியாய்
முன்னேறினால்
'சிப்பாய் ' கூட
சிம்மாசனம் அடையலாம்
எனும் சித்தாந்தம்
கற்கலாம் !
சதுரங்கமும்
வாழ்க்கையும் ஒன்றுதான் !
வகை முறை தெரிந்து
விழித்து இருந்தால் வெற்றி !
No comments:
Post a Comment