Total Pageviews

Tuesday, 27 September 2011

வாடிவிடும் நீயின்றி போனால்...



அன்பு குடிகொண்ட என்
நெஞ்சத்தில் வாரத்தையால்
சிலர் வாள் வீசி சென்றார்கள்
அதன் வலியை நான்
உணரவில்லை இன்னும்


அன்பே இன்று நீ
இருக்கும் என் நெஞ்சத்தில்
பலர் பாறையான சில கேள்விகளை
பலமுறை கேட்டிருக்கிறார்கள்
பாறையான கேள்விகளை -உன்
பாசம எனும் கடப்பாறை கொண்டு
கவி எனும் வடிவத்தில் உடைக்கிறேன்
பரிதவிக்கிறார்கள் சிலர்
பூமகளே நீ புரிந்துகொள்
பூவைவிட மென்மையாது
இந்த பாவி மகன் நெஞ்சம்
உன் பிரிவை தாங்க மாட்டேன்
கல் இல்லையன்பே என் நெஞ்சம் - நீயும்
கசக்காதே பிரிவும் எனும் வார்த்தைகள்
பேசி வலிதங்காது என் இதயம்
வறண்ட இவன் இதயத்தில்
வற்றாத நதியாய் பாய்ந்தோடும்
உன் நினைவால் துளிவிட்ட என் இதயச்செடி
நிரந்தரமாய் வாடிவிடும் நீயின்றி போனால்..
                                        --சிந்து.எஸ்
                                                       -

No comments:

Post a Comment