நீ கூறியதால்....
என் காதலை நிரூபித்தால்
காதல் கணிதமாகிவிடும்
என் காதலை வெளிக்காட்டினால்
காதல் கலையாகிவிடும்
என் காதலை ஆராய்ந்தால்
காதல் ஆராய்ச்சியாவிடும்
என் காதலை விலைபேசினால்
காதல் வணிகமாவிடும்
என் காதலைச் சொன்னால்
காதல் அரசியலாகிவிடும்
என் காதலை விவாதித்தால்
காதல் சட்டமாகிவிடும்
இருந்தும்...
எல்லாவற்றையும் செய்தேன்
நிரூபித்துக்காட்டு என்று
நீ கூறியதால்.
இது ஓவியர் இளையராஜா வின் ஓவியம் என்று நினைக்கிறேன் ....நாடோடி
ReplyDeleteஇக்கவிதையை விட ஓவியம் மிக அருமை
ReplyDelete