போட்டி.. ..
என் கண்ணீர் தீர்க்குமே
தண்ணீர் பஞ்சம்
அது உப்பு என்பதால்
உவர்ப்பே மிஞ்சும்
அற்ப காதலில் நானும்
ஆழமாய் விழுந்தேன்
அறுவடைக்குத் தயாரான
நெல்மணியும் இழந்தேன்
நிலத்தில் நானும் பயிர் செய்தேன்
ஆழ உழுது உரமும் வைத்தேன்
பதரும் கூட விளையவில்லை
பாடுபட்டும் பலன் இல்லை
வளரும் என்றே காத்திருந்தேன்
வேட்கயோடு தவமிருந்தேன்
அந்நிலம் தரிசு என்பதனை
ஒரு விரிசளுகுப்பினே நானறிந்தேன்
வாங்கிய நிலம் வெட்டியானது
வாழ்வே எனக்கு போட்டியானது ..
No comments:
Post a Comment