கவிஞன்
கற்பனையைப் பலமாகக் கட்டுவித்து, அதன் விளைவுமாற-
கண்ணீரைச் சிந்துவதே கவிஞனது வேலை;
சொற்சிறக்க, பொருள் சிறக்கச் சுவையூட்டுங்
கவி எழுதி - தன் சொந்த வாழ்வுக் குறிப்பெழுத மறந்து விடும் பேதை;
நிலவுக்கும் ஆடை கட்டி, அது நீந்துகின்ற வானை விட்டு - நிலமென்னும் மேடைக்கு வரவழைத்து, ஆடவைக்கும் திறம் பெற்ற சித்தன்;
நலம் நோக்கி தன் குடும்பத்தை நடத்துகின்ற செயல் மறந்து -வாழ் நாளெல்லாம் வறுமையுடன் போராடும் பித்தன் ;
அறிவுக்கும் உணவுக்கும் நடக்கின்ற போட்டியிலே இவன் அகப்பட்டு திணறுவது அந்தோ பரிதாபம் !
உரிமைக்கும் உயிருக்கும் உண்டாகும் சண்டையிலே - இவன் உரிமை காக்க உயிரை விட்டுப் போவதுதான் சோகம் !
No comments:
Post a Comment