Total Pageviews

Monday, 12 September 2011

மனம்.......

சொர்க்கம் வேண்டாம் எனக்கு


அது ஒரு சோதனைச்சாலை 
எண்ணங்களின் கழிவுக் குவியல் 
சலவை செய்யப்படாத காவி உடை 
சட்டம் பயிலாத நீதிபதி 
யாரும் புரட்டாத புத்தகம் 
ஒருவன் படைத்த தத்துவம் 
குழம்பி கிடக்கும் குட்டை 
கொதித்திருக்கும் சாட்டை 
ஆர்ப்பரிக்கும் ஓடை 
ஆற்றல் மிகுந்த மேடை 
கனவுகளின் கூட்டம் 
ஒரு கற்பனையான தோட்டம் 
உயர்ந்த ரக மது 
மனம் என்பதே அது... 

1 comment:

  1. இந்த கவிதை யார் எழுதியது ?
    யாராக இருந்தாலும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள் .....வண்ணப்படம் இன்னும் யோசித்து கோர்த்து இருக்கலாம்
    இவன் அகராதி மட்டும் பேசி திரியும் நாடோடி ...

    ReplyDelete