Total Pageviews

Friday, 9 September 2011

வேடதாரிகளின் பகட்டு

ஈழம் மலரும்
இனிமை பிறக்கும்..
ஏங்கிய எம்மினமே.
இழந்தவைகள்
இறந்தகாலமாக இருக்கட்டும்..
நிகழ்காலத்தை
நினைவில் கொள்ளுங்கள்..
அரவழியில்
அடியெடுப்பை அள்ளுங்கள்..
முலைப்பும் உண்டு
முடிவும் உண்டு..
துவண்டது போதும்
துணிந்தால் பகை சாகும்..
போலிகள் மனவயிரம்
அதனாலேயை துயரம்..
மரணதேவனை
மடியிலேயே பார்த்துவிட்டோம்..
ஓர்உயிர்கூட இனி
ஓலமிடக்கூடாது..
அமைதி அடியெடுப்பில்
அதிரட்டும் அகிலம்..
புதிய விடியலில்
அகிலமே அங்கு
கண் விழிக்கட்டும்.
தாயே உன் பாலூட்டலுடன்
அரக்கர்களின் கதைகளையும்
புகட்டு.
அழியட்டும்
வேடதாரிகளின் பகட்டு.

                         

                 கற்பகம்ரவி


                   

No comments:

Post a Comment