Total Pageviews

Sunday, 25 September 2011

காமம் தேடும் காதல்

வாழத்துடிக்கும் வாலிபனே
உண்மைக்காதலை ஊர்ந்தறிந்திடு
காதலெனும் அழகுத்தேரினில்
பவ்வியமாய் நீயும் அமர்ந்திடு
கன்னியொன்று என்றுகண்டு
கண்ணடைத்து காதல் சொல்லி
காமவலையில் கட்டுண்டு
காளையுனை அழித்திடாதே...
அழகியகுணம் அன்புநிறைந்தமனதுடன்
அவளொருவள் உனக்காகவே
பூலோகம் அடைந்துவிட்டாள்
வீற்றிருக்கிறாள் வைகறையில்
நீயிழைக்கும் தவறொன்றை
உன்துணை செய்ய ஏற்பீரா..
கற்பின் சமநிலைக்கு
உன் கற்பும் முக்கியமே...
காதலின்றிய காமத்தில் இன்பமில்லை
காமம் தேடும் காதல் வெல்வதில்லை
காதலின்றி மனிதம் வாழ்வதில்லை
வாழ்வின் அந்தமும் காதலாகிறதே..

No comments:

Post a Comment