Total Pageviews

Tuesday, 8 November 2011

உண்மைக் காதல் உன்னில் இல்லை




உயிரைக் கொடுத்து
உன்னை இழக்கும்
இதயம் எனக்குத்
தேவை இல்லை
வலியைத் தாங்கும்
வார்த்தை தேடும்
உன் விழிகள் இங்கு
அருகில் இல்லை
இளமை தேடும்
பூக்கள் இன்று
வீசும் வாசம்
புரிய வில்லை
அலைகள் மோதி
வந்த காதல்
கரையும் கூட
உணர வில்லை
விதியை நினைத்து
புதிய வழியை சமைக்கும்
இதயம் கூட
என்னில் இல்லை
கடைசிப் பார்வை
உன்னை நோக்கி
என் விழிகள் மூட
அதிஷ்டம் இல்லை
உணர்வை வெறுத்து
உலகைக் கடக்கும்
உண்மைக் காதல்
உன்னில் இல்லை
அமைதி கொடுக்கும்
அடுத்த ஜென்மம்
அதில் என்னைக் காண
உனக்குத் தகுதி இல்லை

                             அபிசேகா
                                 

No comments:

Post a Comment