Total Pageviews

Sunday, 20 November 2011

கற்பிழந்தாய் ஈழத்தாயே




மாசு படிந்து விட்டதே - ஈழத் தாயே
உன் முந்தானை
பாசறையில் அன்று
பாசத்துடன் அரவணைத்தாய்
பாதுகாப்பை எமக்களித்தாய் - எம்
வெற்றிகளில் பரிசம் போட்டாய்
சுற்றி நின்ற பகைவரை
சுட்டு வீழ்த்தி வருகையிலே
கண்பட்டு விடுமென்று - எம்
தலையில் சுற்றிப் போட்டாய்
மண்மூடிக் கிடக்கின்றேன் - இன்று
மனமிரங்க நீயில்லை
அன்னையையும் அந்நியர்க்கு
தாரை வார்க்கும் தனயர் உண்டோ
உன் முன்னே என் உயிர் துச்சம்
இன்றோ ஏதுமில்லை மிச்சம்
அச்சம் மறந்து வாழ்ந்தவர் நாம்
லட்சம் கனவு கண்டவர் தாம்
ஒன்றே சொல்வேன் - என்
உயிர் தான் எனக்கு முதல் எதிரி
உன்னைக் காக்க முன் பிரிந்து விட்டதே
கற்பிழந்தாய் ஈழத்தாயே
கலங்கப்படுத்தினர் கயவருனை
கலங்கி துடிக்கின்றேன் கல்லறைக்குள்..

                                               கஸலிஷாப் பித்தன்
                                                   

No comments:

Post a Comment