இது இந்த பிஞ்சின் குற்றமா??? அல்லது சமூகத்தின் குற்றமா ???? யாரை குற்றம் சொல்ல ??? சிலர் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக வாங்கி பெட்டி கடை,வீடுகளில் வைத்து கள்ளத்தனமாக விற்கின்றனர்.
சீரழியும் சிறுவர்கள்: எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் கூட மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். சிறுவர்கள்,வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு தெரியாமல் பணத்தை எடுத்து வந்து இதுபோன்று விற்பவர்களிடம் வாங்கி குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி வருகின்றனர்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள் பற்றியும், ஆரோக்கிய கல்வி பற்றியும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அந்த நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் 12 வயது சிறுவர்கள் தினம் ஒயின் குடிக்கிறார்கள். அவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் அளவுக்கு ஒயின் குடிக்கிறார்கள். இதனால் அவர்கள் இரவில் சரியாக தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் மறுநாள் வகுப்பு அறையில் தூங்கி வழிகிறார்கள்.
இந்த வயதை சேர்ந்த 4 சதவீத சிறுவர்களை ஆய்வு செய்ததில் அவர்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 28 யூனிட்டு மதுகுடித்ததாக தெரிவித்தனர். இது வயதுக்கு வந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் அளவை விட அதிகம் ஆகும். ஆண்கள் தினம் 3 முதல் 4 ïனிட்டு மதுதான் குடிக்க வேண்டும் என்று வழிகாட்டும் விதிமுறைகள் தெரிவிக்கின்றன.
மது குடிப்பதால் தூக்கம் இல்லாமல் போய் மறுநாள் வகுப்பு அறைகளில் தேவையான அளவுக்கு கவனம் செலுத்த முடியவில்லை என்று 14 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவிகளில் 48 சதவீதம் பேர் தெரிவித்தனர். இதே வயது உள்ள மாணவர்களில் 41 சதவீதம் பேர் இதே பிரச்சினையை சந்திக்கிறார்கள்
No comments:
Post a Comment