Total Pageviews

Saturday, 28 January 2012

என் கண்ணீர்க்கு சொந்தக்காரி




மூச்சாய்க் கலந்தவள் - என்
முழுதுமானவள்
முனகிக் கொள்ளும் என் மனதை
முழுதாய்ப் புரிந்தவள்
முரண்பாட்டுக்  கவியவள்
முல்லை நிலக் கிளியவள்
இன்பப் பேச்சினிலே
இச்சைப் பட்டுச் செல்கையிலே
இடியும் மின்னலும் தந்து செல்லும்
இலவஞ் செடியவள் - என்
இறுதிக் கனவின் நினைவவள்
இசையின் நகலவள்
காற்றிலே சென்று தேடியும்
காணாத் தென்றலாய்
காதல் சொல்லும் வாக்கிலே
கனாக் குவியலாய்
கஷ்டப் பட்டுத் தெளிந்தேன் - என்
கண்ணீர்க்கு சொந்தக்காரியை..!!

No comments:

Post a Comment