Total Pageviews

Saturday, 28 January 2012

என் கண்ணீர்க்கு சொந்தக்காரி




மூச்சாய்க் கலந்தவள் - என்
முழுதுமானவள்
முனகிக் கொள்ளும் என் மனதை
முழுதாய்ப் புரிந்தவள்
முரண்பாட்டுக்  கவியவள்
முல்லை நிலக் கிளியவள்
இன்பப் பேச்சினிலே
இச்சைப் பட்டுச் செல்கையிலே
இடியும் மின்னலும் தந்து செல்லும்
இலவஞ் செடியவள் - என்
இறுதிக் கனவின் நினைவவள்
இசையின் நகலவள்
காற்றிலே சென்று தேடியும்
காணாத் தென்றலாய்
காதல் சொல்லும் வாக்கிலே
கனாக் குவியலாய்
கஷ்டப் பட்டுத் தெளிந்தேன் - என்
கண்ணீர்க்கு சொந்தக்காரியை..!!

Thursday, 26 January 2012





தன்னை வணங்குபவரை திரும்ப வணங்கும் பண்பாடு நமது பண்பாடு..

இந்த அடிப்படை நாகரிகம் கூட தெரியாதவராக உள்ளார் இந்தியாவை ஆளும் அம்மையார்.

எங்கோ பிறந்து இங்குவந்து உழல் செய்வதை கற்று கொண்டவர், சற்று நமது கலாச்சாரத்தையும் கற்று கொண்டால் நன்றாக இருக்கும்.

தமிழன் ஏமாந்தவன் என்றால்
இந்தியன் இளிச்சவாயனாக உள்ளான்.